பாகிஸ்தான் ஊடுருவலை தடுக்க போலீஸ் படை தயார்; ஜம்மு மண்டல ஐ.ஜி.
பாகிஸ்தான் ஊடுருவலை தடுக்க போலீஸ் படை தயார் நிலையில் உள்ளது என்று ஜம்மு மண்டல ஐ.ஜி. முகேஷ் சிங் தெரிவித்துள்ளர்.
ஜம்மு,
இந்தியாவில் ஊடுருவும் முயற்சியாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அடிக்கடி மீறி வருகிறது. இந்த ஊடுருவலை தடுக்க எந்தவொரு சவாலையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று ஜம்மு மண்டல ஐ.ஜி. முகேஷ் சிங், சம்பா மாவட்ட செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சம்பா மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஐ.ஜி. முகேஷ் சிங் பாராட்டியுள்ளார். மேலும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அவர் அனைத்து போலீஸ் அதிகாரிகளிடம், விசாரணையின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி. வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு மண்டலத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஐ.ஜி.-யாக பொறுப்பேற்ற அவர் தற்போது சம்பா மாவட்டத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார். அவர், குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு தக்க அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.