கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை

தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

Update: 2019-08-14 21:16 GMT
புதுடெல்லி,

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரம் உள்ளது. இந்த சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 341 அடி உயரத்தில் உள்ளது.

இந்த சிகரத்தின் மீது 9 வயது இந்திய சிறுவன் அத்வைத் பார்தியா கடந்த 31-ந் தேதி ஏறி சாதனை படைத்துள்ளான்.

இவனது பூர்விகம், மராட்டிய மாநிலம் புனே ஆகும்.

2016-ம் ஆண்டில் 6 வயதாக இருந்தபோது, அத்வைத் எவரெஸ்ட் சிகர அடிவார முகாமுக்கு ஏறி சாதனை படைத்துள்ளான்.

அடுத்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான எல்ப்ரஸ் சிகரம் ஏற அத்வைத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்