விசாகப்பட்டினத்தில் நடுக்கடலில் நின்றிருந்த கப்பலில் தீ விபத்து -28 பேர் மீட்பு

விசாகப்பட்டினத்தில் நடுக்கடலில் நின்றிருந்த கப்பலில் தீ விபத்து நேரிட்டதில் 29 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2019-08-12 09:52 GMT
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் நடுக்கடலில் இருந்த ஜாகுவார் கப்பலில் திடீரென பயங்கர தீ விபத்து நேரிட்டது. கப்பலின் ஒருபகுதியில் ஏற்பட்ட தீ முழுவதுமாக பரவத் தொடங்கியது. இதுதொடர்பாக தகவல்  அறிந்ததும் கடலோர காவல்படையினர் மற்றொரு கப்பலில் சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இதற்கிடையே கப்பலில் இருந்த 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலோர காவல்படை வீரர்கள் அவசரகால உபகரணங்களை கடலில் வீசி 28 பேரை மீட்டனர். கப்பலில் இருந்த ஒருவர் மட்டும் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணியும், கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கவும் கடலோர காவல்படை போராடி வருகிறது.

மேலும் செய்திகள்