அனைத்து மாநிலங்களும் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - உள்துறை அமைச்சகம்

அனைத்து மாநிலங்களும் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2019-08-05 09:43 GMT
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு இன்று நீக்கியது.  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், டிஜிபி.க்கள், டெல்லி போலீஸ் கமிஷனருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அமைதி நிலவ சிறப்பு கவனம் எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய உச்சபட்ச கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக காஷ்மீரில் உள்ள வீடுகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு படிக்க வந்திருக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்