வங்காளதேச முன்னாள் அதிபர் எர்ஷாத் மறைவுக்கு ஜெய்சங்கர் இரங்கல்

வங்காளதேச முன்னாள் அதிபர் முகமது எர்ஷாத் மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-14 17:09 GMT
புதுடெல்லி,

வங்காளதேச முன்னாள் அதிபர் முகமது எர்ஷாத் மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வங்காளதேச முன்னாள் அதிபர் எர்ஷாத் மறைவால் ஆழ்ந்த கவலை அடைந்தேன். இந்தியாவுடனான விசே‌ஷ இருதரப்பு உறவுக்கு ஆற்றிய பங்களிப்புக்கும், வங்காளதேசத்துக்கு ஆற்றிய பொதுச்சேவைக்கும் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்