36 சி.பி.ஐ. அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு : மத்திய மந்திரி தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக பதிலளித்து பேசியதாவது:–

Update: 2019-07-04 22:30 GMT

புதுடெல்லி,

‘சி.பி.ஐ. தனது துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மீதான புகாரை கையாள்வதற்காக வலுவான வழிமுறையை வகுத்துள்ளது. அதன்படி 2016–ம் ஆண்டு முதல் கடந்த மே மாதம் 31–ந்தேதி வரை 36 அதிகாரிகள் மீது 20 ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 10 வழக்குகள் முதற்கட்ட விசாரணையில் உள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறையில், 2016–ம் ஆண்டு முதல் கடந்த 2–ந்தேதி வரை 6 அதிகாரிகள் மீது 7 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்