மருத்துவ கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தை சுட்டுக் கொல்லப்பட்டது

உத்தரகாண்டில் மருத்துவ கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

Update: 2019-07-02 15:42 GMT
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஸ்ரீநகர் மருத்துவ கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தையை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் 2 நாட்களாக போராடினார்கள். முடியவில்லை. நேற்று எங்கு மறைந்து உள்ளது என்பது தெரியாமல் வனத்துறையினர் தவித்தனர். இந்நிலையில் இன்று பட்டாசு வெடித்து சிறுத்தையை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர். அப்போதும் வரவில்லை. ஒவ்வொரு அறையாக சோதனை செய்த போது, ஒரு அறையிலிருந்து பாய்ந்த சிறுத்தை அங்கிருந்தவர்களை தாக்கியது. 

இதில் 6 பேர் காயம் அடைந்ததால், வனத்துறையினர் சிறுத்தையை சுட்டுள்ளனர். அதில் சிறுத்தை உயிரிழந்தது. சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயன்றபோது தாக்கியதாலேயே தற்காப்புக்காக அதனை சுட்டுக்கொல்ல நேரிட்டது என்று வனத்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் எதிர்கொள்ளல் தொடர்ந்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் உயிரிழந்து வருகிறது. இந்தியாவில் 2019 தொடக்கத்தில் 4 மாதங்களில் மட்டும் 200க்கும் அதிகமான சிறுத்தைப்புலிகள் இந்தியாவில் உயிரிழந்து உள்ளது என தொண்டு நிறுவன புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

மேலும் செய்திகள்