உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம்
உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலியாகினர்.
சம்பால்,
உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள லேரவன் என்ற இடத்தில் செல்லும் மோராதபாத் - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் வேனும் சரக்கு வாகனமும் மோதிக்கொண்டதில் 8 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர்.
வேனில் பயணித்தவர்கள் திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.