வயநாடு வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்து வருகிறார்
வயநாடு வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்து வருகிறார்.
வயநாடு,
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற வைத்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று (7-ந்தேதி) முதல் 3 நாட்கள் பயணமாக ராகுல் காந்தி கேரளா சென்றார் .
டெல்லியில் இருந்து இன்று பகல் 2 மணிக்கு புறப்பட்ட ராகுல் காந்தி, ஹரிப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தார். தொடர்ந்து 3 மணிக்கு திருவல்லி பகுதியில் காங்கிரசார் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அங்கு திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நிலம்பூர், எறநாடு, ஹரிக்கோட் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ‘ரோடு ஷோ’க்களில் ராகுல் காந்தி கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
அவர் மொத்தம் 6 சாலை பயணங்களில் பங்கேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் தென்மாநிலத்திற்கு முதன்முறையாக வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH Congress President Rahul Gandhi arrives at Kalikavu in Malappuram district in Kerala. Today, he begins his three-day visit to the state after Lok Sabha elections. pic.twitter.com/e2tTizHIff
— ANI (@ANI) June 7, 2019