ஜூன் 8, 9 தேதிகளில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்
பிரதமராக மீண்டும் பதவி ஏற்ற பின் முதன் முறையாக 8 மற்றும் 9ம் தேதி பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண திட்டத்தை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே உறுதி செய்துள்ளார். அதன்படி ஜூன் எட்டாம் தேதி மாலத்தீவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து ஒன்பதாம் தேதி இலங்கைக்கு செல்கிறார். இந்த தகவல்களை மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
2வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு, இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி திருப்பதி வருகிறார். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின் ரேணிகுண்டா சென்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.