அமேதியில் ராகுல் தோல்விக்கான காரணம் பற்றி காங்கிரஸ் ஆய்வு

அமேதியில் ராகுல் தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் ஆய்வு நடத்தி வருகிறது.

Update: 2019-06-01 22:45 GMT
அமேதி,

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுவான தொகுதியான அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி இரானியிடம் 55,120 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதற்கு பொறுப்பேற்று அமேதி காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா ராஜினாமா செய்துள்ளார்.

இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவின் அரசியல் பணிகளை கவனிக்கும் சுபைர்கான், சோனியா காந்தியின் பிரதிநிதி கிஷோரிலால் சர்மா ஆகியோர் கடந்த 3 நாட்களாக அமேதியில் முகாமிட்டு ஆய்வு நடத்திவருகிறார்கள். காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ்சிங் கூறும்போது, “இந்த ஆய்வு கிராம அளவில் நடத்தப்படுகிறது. ஆய்வு கமிட்டியினர் பஞ்சாயத்து மற்றும் வட்டார தலைவர்களுடன் கூட்டங்கள் நடத்தி காரணங்களை கேட்டுவருகிறார்கள்” என்றார்.

மேலும் செய்திகள்