தொடர்ந்து ‘பப்ஜி’ விளையாடிய பிளஸ்-2 மாணவன் சாவு

தொடர்ந்து ‘பப்ஜி’ விளையாடிய பிளஸ்-2 மாணவன் உயிரிழந்தார்.

Update: 2019-05-31 21:29 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலம் நாசிராபாத் பகுதியை சேர்ந்தவர் ஹாரூண் ரஷித் குரேசி. இவரது மகன் பர்கான் குரேசி(வயது 16). பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் நீமச் பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவில் ஹாரூண் தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று கலந்து கொண்டார். அங்கு செல்போனில் ‘பப்ஜி’ விளையாடிய பர்கான் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தான்.

இது குறித்து ஹாரூண் ரஷித் கூறுகையில், ‘இரவில் வெகுநேரம் செல்போனில் ‘பப்ஜி’ விளையாடிய பர்கான் சிறிது நேரம் தூங்கினான். பின்னர் காலையில் எழுந்து தொடர்ந்து 6 மணிநேரம் அதே விளையாட்டை விளையாடினான். அப்போது ‘குண்டு வெடிக்கிறது... குண்டு வெடிக்கிறது’ என கூறியவாறு திடீரென மயங்கி விழுந்தான். இதையடுத்து அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு சிகிச்சை பலன் இன்றி மாரடைப்பு ஏற்பட்டு எனது மகன் இறந்து விட்டான்’ என்று கூறினார்.

இதுகுறித்து இதயநோய் நிபுணர் ஒருவர் கூறுகையில் ‘சமீப காலமாக சிறுவர்கள் செல்போனில் அதிகநேரம் விளையாடுகிறார்கள். இதனால் அவர்கள் இதயம் செயல் இழக்க நேரிடுகிறது. எனவே பெற்றோர்கள் அவர்களுக்கு செல்போன் தருவதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்