போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
புதுடெல்லி,
இந்தியா- ரஷியா கூட்டு தயாரிப்பில் உருவான பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்டது. 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான எஸ்.யு. 30 எம்.கே.ஐ. போர் விமானத்தில் இருந்து நேற்று இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் திறன் படைத்த இந்த ஏவுகணை ஏற்கனவே தரையில் இருந்தும், கப்பலில் இருந்தும் செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.