ஒடிசாவில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ஒடிசாவில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-05-22 09:44 GMT
புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் 26-வது தேசிய நெடுஞ்சாலையில் ஜரிங் என்ற இடத்தில் உறவினர்கள் 7 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்