மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் -ராஜ்நாத் சிங் நம்பிக்கை

17-வது மக்களவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-14 17:28 GMT
புதுடெல்லி,

பா.ஜனதா கட்சித் தலைமையகத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “நாடு முழுவதும் 110 தேர்தல் பிரசாரங்களில் பேசி உள்ளேன். பா.ஜனதா கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெறும்.

2014-ம் ஆண்டு தேர்தலில் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இப்போதும் வைத்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மோடி மற்றும் மன்மோகன், சோனியா இடையே போட்டி நிலவியது. ஆனால் தற்போது இந்தியாவை பிரதமர் மோடியால் தான் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால், மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தர விரும்புகின்றனர் என்றார்.

தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் அறிவித்துவிட்டோம். அதே போல் எதிர்கட்சிகள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்