சர்வதேச எல்லை அருகே பாக். முன்னாள் ராணுவ வீரர் கைது
காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டி சந்தேகத்துக்கிடமான நடமாட்டம் தென்பட்டது.
ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டி சந்தேகத்துக்கிடமான நடமாட்டம் தென்பட்டது. உஷார் அடைந்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவர் ஊடுருவி வந்துள்ளார்.
முதல் கட்ட விசாரணையில், அவர் அந்நாட்டு முன்னாள் ராணுவ வீரர் என்றும், பெயர் முகமது அப்சல் (வயது 35) என்றும் தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.