எதிர்க்கட்சிகளில் முன்னிலை வகிப்போம்: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 இடங்களில் வெற்றி பெறும் - வீரப்ப மொய்லி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளில் முன்னிலை வகிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார்.
ஐதராபாத்,
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி, ஐதராபாத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளில் நாங்கள் முன்னிலை வகிப்போம். மாநில வாரியாக நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து பகுப்பாய்வு செய்து பாருங்கள். பாரதீய ஜனதா கூட்டணி அரசு வீழ்ந்து விடும் என்ற முடிவுக்கு நிச்சயம் நீங்கள் வருவீர்கள்” என உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 1996-1998 ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து, மத்தியில் அமைந்திருந்த ஐக்கிய முன்னணி அரசு போன்றதொரு அரசு மீண்டும் அமையக்கூடும் என சில கட்சிகள் கணிக்கின்றனவே?
பதில்:- இப்போது அப்படி எதுவும் கிடையாது. அப்படி இப்போதே சொல்லி விட முடியாது. அதற்கான கால நேரம் வரவில்லை.
எங்கள் அனைவரின் பொது எதிரி நரேந்திர மோடியும், பாரதீய ஜனதா கூட்டணியும். எனவே மாநில கட்சிகள், பாரதீய ஜனதா கூட்டணியில் சேராது. எதிர்க்கட்சிகள் பலவும் ஒன்று சேர்ந்து நிச்சயம் மத்தியில் கூட்டணி அரசு அமைக்கும்.
கேள்வி:- பிரியங்கா காந்தி, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடாதது குறித்து?
பதில்:- அது தேவையற்றது. ஒரு தொகுதியில் போட்டியிடுகிறபோது, அங்கேயே அவர் முடங்கி விட நேர்ந்திருக்கும். இப்போது அவரது சேவை தாராளமாக கிடைக்கிறது. அவர் பிரசாரத்துக்காக எங்கும் செல்கிறார். அது எங்களுக்கு கூடுதல் நன்மையை கொடுத்திருக்கிறது.
கேள்வி:- பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி களம் இறக்குமா?
பதில்:- காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் பெரிய கட்சி, குறிப்பாக எதிர்க்கட்சிகளில் பெரிய கட்சி. நிச்சயமாக எதிர்க்கட்சி முன்னணிக்கு நாங்கள் தலைமை வகிப்போம். அதற்கான வாய்ப்பு சாதகமாக இருக்கிறது.
கேள்வி:- காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய 2 கட்சிகளும் இடம் பெறாத மாநில கட்சிகளின் முன்னணியை ஏற்படுத்த சந்திர சேகரராவ் முயற்சி எடுக்கிறாரே?
பதில்:- இதன் அர்த்தம், அவர் பாரதீய ஜனதா கட்சி கூட்டணிக்கு எதிரானவர் என்பதுதான். சிவசேனா, ராம்விலாஸ் பஸ்வான் கட்சி போன்றவற்றைத் தவிர பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஏற்றுக் கொள்வோர் இல்லை.
கேள்வி:- காங்கிரஸ் கூட்டணியில் இப்போது இல்லாத கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நண்பர்களாகக் கூடுமோ?
பதில்:- சரியாக சொல்கிறீர்கள். அதற்கான வாய்ப்புகள் எப்போதும் போலவே இருக்கின்றன. தேர்தலுக்கு முன்பாகவும், அதே போன்று பின்பாகவும் கூட்டணி ஏற்படுத்த முடியும். 2004-ல் கூட இப்படி நேர்ந்தது.
உதாரணத்துக்கு கேரளாவில் இடதுசாரி முன்னணியை ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ் கூட்டணி) எதிர்க்கிறது. எனவே இவ்விரு கட்சிகள் இடையே தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைக்க முடியாது. இருந்தாலும், 2004-ல் நாங்கள் ஒன்றுபட்டு அரசு அமைத்தோம்.
பாரதீய ஜனதா கூட்டணியை வீழ்த்துவதற்காக பெரும்பாலான மாநில கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் ஒன்று சேரும். அப்படி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அரசு அமைக்கும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.