“தடையை மீறி பிரசாரம் செய்யவில்லை” - தேர்தல் கமிஷனுக்கு பிரக்யா சிங் பதில்
தடையை மீறி பிரசாரம் செய்யவில்லை என தேர்தல் கமிஷனுக்கு பிரக்யா சிங் பதில் அளித்தார்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் போட்டியிடுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுக்காக அவர் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது. ஆனால், அதை மீறி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அவர் கோவில்களுக்கு சென்றபோது, அவருக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
அதுகுறித்து விளக்கம் கேட்டு பிரக்யா சிங்குக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. பிரக்யா சிங், தனது பதிலை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி சுடம் காடேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், தடை விதிக்கப்பட்ட நேரத்தில், தான் பிரசாரம் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
“கோவிலுக்கு செல்வது எனது வாழ்க்கையின் ஒரு அங்கம். அங்கு என்னை செல்லவிடாமல் தடுப்பவர்கள், தங்கள் வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டும்” என்றும் பிரக்யா சிங் கூறியுள்ளார். இந்த விளக்கம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.