ரம்ஜான் நோன்பு-வெயில் காரணமாக ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கு தொடங்கலாம் -சுப்ரீம் கோர்ட் யோசனை

ரம்ஜான் நோன்பு மற்றும் வெயில் காரணமாக ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கு தொடங்கலாமே என்று தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.

Update: 2019-05-02 11:29 GMT
புதுடெல்லி

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இன்னும் 3 கட்ட தேர்தல் வருகிற  6, 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் ரம்ஜான் நோன்பு மற்றும் கடும் வெயில் காரணமாக எஞ்சிய வாக்குப் பதிவை முன்னதாக, தொடங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த  சுப்ரீம் கோர்ட்  எஞ்சிய 3 கட்ட ஓட்டுப் பதிவை காலை 5.30 மணிக்கே தொடங்குவது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலிக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்