ஊழல் புகாரில் சிக்கிய 79 மத்திய அரசு ஊழியர்கள் - வழக்கு தொடர அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பு

ஊழல் புகாரில் சிக்கிய 79 மத்திய அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன.

Update: 2019-04-15 21:15 GMT
புதுடெல்லி,

ஊழல் புகாரில் சிக்கிய ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட மத்திய அரசு ஊழியர்கள் 79 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் காத்திருக்கிறது. ஆனால், 4 மாதங்களுக்கு மேல் ஆகியும், சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன.

இந்த ஊழியர்கள் மீது மொத்தம் 41 வழக்குகள் தொடரப்பட உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 9 வழக்குகள், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

உத்தரபிரதேச அரசின் அனுமதிக்காக 8 வழக்குகளும், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி ஆகியவற்றின் அனுமதிக்காக 4 வழக்குகளும், யூனியன் பிரதேச அரசுகளின் அனுமதிக்காக 3 வழக்குகளும் காத்திருக்கின்றன.

வழக்கு தொடர விரைந்து அனுமதி வழங்குமாறு நினைவுபடுத்தி இருப்பதாக ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்