பிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல்

பிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-04-15 12:01 GMT
 புதுடெல்லி,

பிரதமர் மோடி ஏப்ரல் 26ஆம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து நடைபெறும் பிரமாண்ட பேரணியில் பங்கேற்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து காலபைரவர் கோவிலில் வழிபாடு, பின்னர் கங்கை ஆரத்தி ஆகியவற்றில் பங்கேற்கிறார்.

ஏப்ரல் 26ஆம் தேதி காசி விசுவநாதர் கோவிலில் வழிபட்ட பின்னர், பிரமாண்ட பேரணியில் பங்கேற்றுவிட்டு மோடி வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மே 19ஆம் தேதி நடைபெறும் ஏழாவது மற்றும் கடைசிக்கட்ட தேர்தலில் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்