நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி: வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லாவிட்டால் நன்றாக இருக்காது மேனகா காந்தி

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லாவிட்டால் நன்றாக இருக்காது என்று மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-12 14:09 GMT
லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய மந்திரி மேனகா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த முறை உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அந்த தொகுதியில் அவரது மகன் வருண் காந்தி போட்டியிடுகிறார். ஆகவே மேனகா காந்தி, தனது மகன் வருண்காந்தி ஏற்கெனவே போட்டியிட்ட சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் சுல்தான்பூர் தொகுதியில் பிரச்சாரத்தில் பேசியதாவது:-

நான் உறுதியாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற போகிறேன். ஆனால் இந்த வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லாவிட்டால் அது நன்றாக இருக்காது. அத்துடன் இங்குள்ள இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்காமல் என்னிடம் வேலை கேட்டுவந்தால் அவர்களுக்கு நான் ஏன் உதவி செய்யவேண்டும். அதனால் எனக்கு வாக்களித்தால் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். இதற்கான அடித்தளத்தை அமைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மேலும் என்னுடைய வேலையை பற்றி நான் கடந்த முறை போட்டியிட்ட பிலிபிட் தொகுதியில் கேட்டுப் பாருங்கள் எனக் கூறினார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சேய் கான், மேனகா காந்தியின் இந்தப் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கவேண்டியது. வாக்களிக்க மக்களை வற்புறுத்துவது தவறு. தேர்தல் ஆணையம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்