டெல்லியில் காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணி கிடையாது
டெல்லியில் காங்கிரஸ் - ஆம்ஆத்மி இடையே கூட்டணி கிடையாது என தெரிய வந்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. மாநிலத்தில் தனியாக போட்டியிடப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதியிலும் தனியாகவே போட்டியிடப் போகிறோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ பேசுகையில், எங்களுக்கு 3 தொகுதிகள், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள் என்ற அடிப்படையில் நாங்கள் இப்போது கூட கூட்டணிக்கு தயாராக உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
டெல்லியில் பா.ஜனதாவிற்கு எதிராக கூட்டணியை கட்டமைப்பதில் ஆம்ஆத்மி தலைமை தோல்வியை கண்டது எனவும் குறிப்பிட்டார். டெல்லியை தவிர்த்து அரியானா மற்றும் பஞ்சாப்பில் கூட்டணியை வைக்கை ஆம்ஆத்மி விருப்பம் கொள்கிறது.
ஆனால் காங்கிரஸ் பிற மாநில விவகாரங்களை இதனுடன் சேர்க்க விரும்பவில்லை. இதனால் கூட்டணி அமையாமல், பேச்சு வார்த்தையுடன் முடிந்தது என தெரிகிறது.