ஜெய்ப்பூர் கோட்டை மீது நின்று ‘செல்பி’ எடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணி கீழே விழுந்து காயம்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மார்குயிஸ் (வயது 27) என்பவர் தனது தாயுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டைக்கு வந்தனர்.

Update: 2019-04-11 21:19 GMT

ஜெய்ப்பூர், 

 மார்குயிஸ் கோட்டை சுவர் மீது ஏறி நின்று ‘செல்பி’ எடுத்தார். அப்போது திடீரென அவர் தடுமாறி 40 அடிக்கு கீழே விழுந்தார்.

அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. லேசான காயம் அடைந்த அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்