பாலகோட் தாக்குதலுக்கு பின் மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு- கருத்து கணிப்பு

பாலகோட் தீவிரவாத முகாம் மீது தாக்குதலுக்கு பின் மோடி மீண்டும் பிரதமராக 10 சதவீதம் ஆதரவு அதிகரித்து உள்ளது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-04-05 05:39 GMT
புதுடெல்லி

பாலகோட் தீவிரவாத முகாம் மீது தாக்குதல், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களால் மோடிக்கு செல்வாக்கு கூடியிருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

ஜனவரி 7ம் தேதிக்கும் பிப்ரவரி 26ம் தேதிக்கும் இடையே வெளியான அறிவிப்புகளால் தேர்தல் நேரத்தில் மோடிக்கும் பா.ஜ.க. அரசுக்கும் சாதகமான பலன்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்டிஎஸ்-லோக்நீதி -தி இந்து-திரங்கா தொலைக்காட்சி-டாய்னிக் பாஸ்கர் போன்ற பல்வேறு ஊடக அமைப்புகள் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வர 43 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே மாநிலங்களில் மே 2018 நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மோடிக்கு 3 சத்வீத ஆதரவே இருந்த்து தற்போது   9 புள்ளிகள் அதிகரித்து உள்ளது.

வரவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு பிறகு நீங்கள் இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 43 சதவீதம் பேர்  மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர்.

ராகுல் காந்தி பிரதமராக 24 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட மற்ற தலைவர்கள் யாவரும் மூன்று சதவீத வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பெற முடியவில்லை.

 

மே14

மே17

ஜனவரி18

மே18

முன்வாக்கெடுப்பு19

ரேந்திர மோடி

36

44

37

34

43

ராகுல்காந்தி

16

9

20

24

24

மாயாவதி

2

3

3

3

3

மம்தாபானர்ஜி

1

1

3

3

2

மற்றதலைவர்கள்

17

19

18

19

13

பதில் இல்லை

28

24

19

17

15


பாலகோட்  தாக்குதல்,  10 சதவிகித ஒதுக்கீடு மற்றும் சமீபத்திய பண பரிவர்த்தனையிலிருந்து பயன் அடைந்த விவசாயிகளிடையே நன்கு அறிந்தவர்கள் மத்தியில் மோடி பிரபலமாக உள்ளார்.

 

நரேந்திரமோடி பிரதமராகவிரும்புகிறேன் (%)

ராகுல்காதி
பிரதமராக
விரும்புகிறேன்
(%)

பாலகோட்  தாக்குதல் குறித்து கேள்விப்படவில்லை

32

24

பாலகோட்  தாக்குதல் குறித்து தெரியும்

46

24

 

பொதுபிரிவில் 10 இடஒதுக்கீடுபற்றிதெரியாது

37

24

பொதுபிரிவில் 10 இடஒதுக்கீடுபற்றிதெரியும்

48

24

 

கடந்தஒருமாதத்தில்அரசாங்கத்தில்இருந்துபணத்தைபெறாதவிவசாயிகள்

42

27

கடந்தஒருமாதத்தில்அரசாங்கத்தில்இருந்துபணத்தைபெற்றவிவசாயிகள்

54

22


இந்த விஷயத்தில் பி.ஜே.பி. தேர்தல் மைலேஜ் எடுக்கும் என நம்புகிறவர்கள் கூட, மோடி அரசு அதிகாரத்திற்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறது.

 

மோடி அரசுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கலாம் (%)

மோடி அரசுக்கு மற்றொரு வாய்ப்புகொடுக்க கூடாது (%)

பிஜேபிதேர்தல்ஆதாயத்திற்காகவழங்குவதைஒப்புக்கொள்பவர்கள்

46

43

பிஜேபிதேர்தல்ஆதாயத்திற்காகவழங்குவதைஒப்புக்கொள்ளாதவர்கள்

66

27

பதில் இல்லை

41

27


பாலகோட் தாக்குதல் மோடி அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் அதிக ஆதரவு மற்றும் தென்னிந்தியாவில் குறைந்த ஆதரவு பெறுகிறது.

பாலகோட் தாக்குதல் ஆதரவு

விமானப்படை

மோடி அரசு

இருவருக்கும்

வட இந்தியா

42

20

31

கிழக்கு இந்ஹியா

40

20

33

மேற்கு மத்திய இந்தியா

41

17

34

தென் இந்தியா

60

16

17

இந்தி பேசும் மாநிலங்கள்

38

22

34

இந்தி பேசாத மாநிலங்கள்

52

15

25


ரபேல் ஒப்பந்தம் பற்றி  நன்கு அறிந்தவர்களில் பெரும்பாலோர் மோடியை ஊழல் மிகுந்தவர்களைக் காட்டிலும் சுத்தமாகவும், நேர்மையானவர்களாகவும் பார்க்க முடிகிறது;ரபேல் ஒப்பந்ததில் தவறு நடந்து உள்ளது  என நம்புகிறவர்கள் கூட மோடி குற்றமற்றவர் என நம்புகிறார்கள்.

மோடி சுத்தமானவர்- நேர்மையானவர்  (%)

சுத்தமானவர்- நேர்மையானவர் ஆனால் ஊழலை ஒழிக்க ஒன்றும் செய்யவில்லை(%)

மோடி ஊழல்
(%)

ரபேல் ஓப்பந்தம் பற்றி அறிந்தவர்

44

24

24

ரபேல் ஓப்பந்தம் அறியாதவர்

36

17

17

 

 

 

 

ஒப்பந்தத்தில் தவறு நடந்து உள்ளது

24

29

39

ஒப்பந்தத்தில் தவறு நடக்கவில்லை

68

17

11

மேலும் செய்திகள்