"இடதுசாரிகளை தோற்கடிக்க காங். முயற்சி" - கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கருத்து

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கு பதிலாக இடதுசாரிகளை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-24 13:14 GMT
திருவனந்தபுரம்,

 கேராளவில் ராகுல் காந்தி போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு பதில் அளித்துள்ள பினராயி விஜயன், ராகுல்காந்தி கேரளாவுக்கு வருவது பாஜகவுடன் போட்டியிடுவதற்காக அல்ல என்றும் இடதுசாரிகளுடன் போட்டியிடவே அவர் வருவதாகவும் கூறினார். இன்றைய நிலையில் இது தேவைதானா என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

மேலும் செய்திகள்