மோடி பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே காவலாளி : ராகுல்காந்தி தாக்கு

பீகார் மாநிலம் புர்னியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-03-24 00:00 GMT
புர்னியா, 

எப்படிப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் காவலாளியை வேலைக்கு வைத்திருப்பார்கள்? சாதாரண மக்களின் வீட்டு வாசலில் காவலாளி நிற்பதை பார்த்திருக்கிறீர்களா? பெரும் பணக்காரர்கள் தான் அப்படி செய்வார்கள். சாதாரண மக்களாகிய நீங்கள் உங்கள் வீடுகளை நீங்களே பாதுகாத்துக்கொள்கிறீர்கள்.

மோடி எப்போதும் தன்னை நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்கிறார். ஆனால் நடைமுறையில் அவர் சில குறிப்பிட்ட பெரிய நிறுவனங்களுக்கும், அதன் அதிபர்களின் வீடுகளுக்கும் மட்டுமே காவலாளியாக இருக்கிறார். அவர் சாதாரண மக்களின் பணத்தை திருடி பெரிய நிறுவனங்களின் பணப்பெட்டியில் சேர்க்கிறார். ரபேல் ஒப்பந்தம் மூலம் தனது நண்பர் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார்.

பண மதிப்பு இழப்பின்போது சாதாரண மக்கள் தான் மணிக்கணக்கில் வரிசையில் நின்றார்கள். கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் சுலபமாக தங்கள் பணத்தை மாற்றிவிட்டனர்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். 

மேலும் செய்திகள்