தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பாலகோட் தாக்குதல் - பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பரூக் அப்துல்லா குற்றம் சாட்டினார்.

Update: 2019-03-11 23:00 GMT
ஸ்ரீநகர்,

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியதாவது:-

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது. கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒரு விமானத்தை நாம் இழந்துவிட்டோம். விமானி அபிநந்தன் பாதுகாப்புடனும், மரியாதையுடனும் பாகிஸ்தானில் இருந்து திரும்பி வந்ததற்கு நன்றி. இந்த தாக்குதலை நடத்தியதால், ஏதோ அவர் இல்லை என்றால் இந்தியா அழிந்துவிடும் என்பது போன்ற ஒரு அவதாரமாக மோடி தன்னை நினைத்துக்கொள்கிறார்.

அவரோ அல்லது நானோ உயிருடன் இருக்கிறோமோ, இல்லையோ - இந்தியா உயிர்வாழும், முன்னேறி செல்லும். ஒரு அச்சமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். போர் எதுவும் இல்லை, ஒட்டுமொத்த உலகமும் கவனிக்கிறது. இந்த அரசு மூத்த அதிகாரிகளை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்திக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்