மத்திய நிதி செயலாளராக சுபாஷ் சந்திர கார்க் நியமனம்

மத்திய நிதி செயலாளராக சுபாஷ் சந்திர கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-03-08 18:00 GMT
புதுடெல்லி,

மத்திய பொருளாதார துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க் நிதி செயலாளராக நியமிக்கப்பட்டார். 58 வயதாகும் கார்க் 1983-ம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

முன்னாள் நிதி செயலாளர் அஜய் நாராயண் ஜா, பதவிக் காலம் பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் சுபாஷ் சந்திர கார்க் நிதி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. 


மேலும் செய்திகள்