புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை அடையாள அட்டையாக கருதமுடியாது : தேர்தல் கமி‌ஷன்

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை அடையாள அட்டையாக கருதமுடியாது என தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

Update: 2019-03-01 23:02 GMT

புதுடெல்லி, 

தேர்தல் கமி‌ஷன் இதுபற்றி கூறியிருப்பதாவது:–

வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) அச்சிட்டு, தேர்தல் நெருங்கும்போது வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளுக்கு வழங்கப்படும். உண்மையில் வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாக தொடங்கப்பட்ட அந்த பணி இன்னும் முழுமையாக நிறைவுபெறவில்லை.

எனவே புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை தேர்தலின்போது அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது. வாக்காளர் அடையாள அட்டை உள்பட தேர்தல் கமி‌ஷனால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்காளர்கள் ஓட்டு போடும்போது கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்