இந்திரா காந்தியை போன்று மோடி இல்லை, அவருடனான ஒப்பீடு அவமானமாகும் -ராகுல்காந்தி
இந்திரா காந்தியை போன்று மோடி இல்லை, அவருடனான ஒப்பீடு அவமானமாகும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
புதுடெல்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருவருக்கும் இடையேயான ஒப்பீடுகள் தேவை இல்லாதது. அது இந்திரா காந்திக்கு ஒரு அவமதிப்பு ஆகும். என் பாட்டி முடிவுகளில் காதல் மற்றும் பாசம் இருந்தது. அவரது பணி இயல்புடன் ஒன்றிணைந்தது, மக்களுடன் சேர்ந்து கொண்டு இந்திய ஏழைகள் மீது அக்கறை காட்டினார்.
மோடியின் முடிவு கோபம் மற்றும் வெறுப்பு மற்றும் அவரது முடிவுகள் நாட்டை பிரிக்கிறது. நரேந்திர மோடிக்கு ஏழைகள் மீது எந்தவித அக்கறையும் இல்லை என கூறினார்.