மின்னணு வாக்குப்பதிவு விவகாரம்: தேர்தல் ஆணையரை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு
மின்னணு வாக்குப்பதிவு விவகாரத்தில், தேர்தல் ஆணையரை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தது.
புதுடெல்லி,
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் மற்றும் தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி, ஜனதா தளம் (எஸ்), சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ராஷ்டிரீய லோக்தளம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய பட்ஜெட்டை ‘அதிரடி தாக்குதல்’ என பா.ஜனதா கட்சி புகழ்ந்து கொள்கிறது. உண்மையில் ‘அதிரடி தாக்குதல்’ பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் முடிவில் கிடைக்கும். மின்னணு வாக்குப்பதிவு மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த தலைமை தேர்தல் ஆணையரை 4-ந்தேதி சந்திக்க உள்ளோம் என்றார்.
இதனிடையே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நிராகரித்தார்.