தமிழகத்தில் 2 தொகுதி தேர்தலை ரத்து செய்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் 2 தொகுதி தேர்தலை ரத்து செய்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறி உள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேட்டியின் போது கூறியதாவது:-
தமிழகத்தில் 2 தொகுதி தேர்தலை ரத்து செய்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. பணப்பட்டுவாடா தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. மாநில தேர்தல் களத்தில் பணப்பட்டுவாடா அதிகரித்ததே நான் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்த போது எதிர்கொண்ட முதல் சவாலாகும்.
முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது, சில மாநிலங்களில் அதிக அளவு கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பால், தேர்தல்களில் கறுப்பு பண புழக்கத்தை தடுக்க முடியவில்லை என கூறினார்.