பயங்கரவாத அமைப்பில் இருந்த காஷ்மீர் மாணவர் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார்
பயங்கரவாத அமைப்பில் இருந்த காஷ்மீரைச் சேர்ந்த மாணவர், குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் எதீசம் பிலால் (வயது 20). என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் திடீரென அவர் மாயமானார். எதீசம் பிலாலை பல்வேறு இடங்களிலும் அவரின் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் பயங்கரவாத அமைப்பின் கொடியுடன் இருந்த எதீசம் பிலாலின் புகைப்படத்தை பார்த்து அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீஸ் உதவியை நாடினர். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில், “நீ எங்களின் ஒரே மகன். பெற்றோரின் பொற்பாதம் தான் சொர்க்கம் என்று நீ அடிக்கடி சொல்லி வந்தாய். எனவே நீ எங்களுக்கு உயிருடன் வேண்டும்” என்று உருக்கமாக மகனுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
பெற்றோரின் அழைப்பை ஏற்று பயங்கரவாத அமைப்பில் இருந்த எதீசம் பிலால் நேற்று மதியம் தன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். அவரை ரகசிய இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘நாங்கள் எதீசம் பிலாலை கைது செய்ததாக கூறப்படுவது தவறான தகவல். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவே அழைத்துச் சென்றோம்’ என்றனர்.