அமெரிக்க பத்திரிக்கையாளர் பலாத்கார குற்றச்சாட்டு “இருவர் சம்மதத்துடன்தான் நடந்தது” என எம்ஜே அக்பர் பதில்

அமெரிக்க பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை சுமத்தியதற்கு “இருவர் சம்மதத்துடன்தான் நடந்தது” என எம்ஜே அக்பர் பதிலளித்துள்ளார்.

Update: 2018-11-02 10:30 GMT
புதுடெல்லி,

பிரபல பத்திரிக்கையாளர்களாக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது அவருடன் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் மீடூ மூலம் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நெருக்கடி எழவும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர் 1994-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் எம்ஜே அக்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுள்ளார். அக்பரால் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டேன் என்பதை விளக்கியுள்ளார்.

இதற்கு எம்ஜே அக்பரின் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்ததாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜெய்பூர் ஓட்டலில் உடல் ரீதியாக பலம்வாய்ந்த அக்பர் என்னை பலாத்காரம் செய்தார், அவமானமாக உணர்ந்த என்னால் காவல் துறையில் புகாரளிக்க முடியவில்லை. அப்போது இதுதொடர்பாக யாரிடமும் பேசவில்லை என்றும் பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டியிருந்தார். இப்போது இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள எம்ஜே அக்பர், “இருவர் சம்மதத்துடன்தான் பாலியல் உறவு மேற்கொண்டோம்,” என்று கூறியுள்ளார்.

1994களில் குற்றம் சாட்டிய பத்திரிக்கையாளரும், நானும் சம்மதத்துடனான உறவை தொடங்கினோம், பல மாதங்களாக தொடர்ந்தது. இந்த உறவுமுறை குறித்தான பேச்சு எழுந்துள்ளது, என்னுடைய சொந்த வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த சம்மதத்துடனான உறவு முடிந்துவிட்டது, ஒருவேளை நல்ல முறையில் முறிந்திருக்காது என்று கூறியுள்ளார் எம்ஜே அக்பர்.

மேலும் செய்திகள்