டெல்லியில் கனமழை: தெருக்களில் குளம் போல் நீர் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் கனமழை காரணமாக தெருக்களில் குளம் போல் நீர் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-03 10:15 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள், மற்றும் தெருக்களில் வெள்ள நீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. கனேஷ்ச்வுக், லக்‌ஷ்மி மெட்ரோ ஸ்டேஷன், பஞ்சாபிபாக், மோதிநகர் மேம்பாலம், டி.எம் ஆபிஸ் நலா சாலை,  அவுரோபிண்டோ மார்க் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.  தெருக்களில், தண்ணீர் தேங்கி கிடந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35.9 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று முழுவதும் கனமழை தொடரும் என்று அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்