தமிழகத்தை போல் நம்மை நாமே ஆளுவோம் - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
டெல்லி தலைமையிடம் சரணடையாமல், தமிழகத்தை போல் நம்மை நாமே ஆள வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். #ChandrasekharRao
ஐதராபாத்
தெலங்கானாவில் உள்ள ரங்காரெட்டி பகுதியில், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பொதுக் கூட்டம், நடைபெற்றது. இதில் பேசிய சந்திரசேகர ராவ், தெலுங்கானா சட்டமன்றத்தை கலைக்கும் எண்ணம் இல்லை . சட்டப் பேரவையை தான் முன்கூட்டியே கலைப்பது குறித்து எந்த முடிவை எடுத்தாலும் முன்னதாகவே தொண்டர்களுக்கு தெரிவிப்பேன் என்றார்.
தமிழகத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்களே ஆட்சியில் இருப்பது போல், தெலங்கானாவையும் நம்மை நாமே ஆட்சி செய்ய வேண்டும் . டெல்லியில் இருந்து யாரையோ தேர்ந்து எடுப்பதற்கு பதில் தமிழ் மக்களைப் போல், நாமும் கூட பிராந்தியக் கட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களை போலல்லாமல் தேசிய கட்சிகள் அவர்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும் ஒவ்வொரு முறையும் டெல்லி ஓட வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு ஓட வேண்டும், எங்கள் தலைவர்கள் தெலுங்கானாவில் உள்ளனர். என கூறினார்.