உத்தர பிரதேசத்தில் குரங்குகள் தொல்லைக்கு யோகி ஆதித்யநாத் புதிய யோசனை

உத்தரபிரதேசத்தில் குரங்குகள் தொல்லைக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் புதிய யோசனை தெரிவித்துள்ளார். #YogiAdityanath

Update: 2018-09-02 09:47 GMT
மதுரா,

உத்தர பிரதேசத்தில் மதுரா மற்றும் பிருந்தாவனில்  உள்ள குரங்குகள் அங்கு வரும் பக்தர்களுக்கு தொல்லைக்கொடுத்து வருகின்றது. இதனால் தினமும் குரங்குகளால் சிறிய, பெரிய விபத்துகளும் அரங்கேறி வருகிறது. 

குறிப்பாக பிருந்தாவனில் உள்ள ஒரு கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் மூக்குக் கண்ணாடியை குரங்குகள் பிடுங்கிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இதைப் பணயமாக வைத்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளிடம் உணவைப் பெற்றுக் கொள்கிறது.

இந்தநிலையில், யோகி ஆதித்யநாத் மதுராவின் பிருந்தாவன் சென்று இருந்தார். அங்கு உத்தர பிரதேச சுற்றுலாத்துறை சார்பில் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மதுராவாசிகள் அங்கு குரங்குகள் தொல்லை கொடுத்து வருவதாக புகார் அளித்தனர்.

இதனை கேட்ட யோகி ஆதித்யநாத் அவர்களிடம் ஒரு புதிய யோசனையை தெரிவித்தார். ஹனுமரை தினமும் வணங்கி, மந்திரித்தை ஓதுங்கள். குரங்குகள் உங்களுக்கு எப்போதுமே தொல்லை தராது எனத்தெரிவித்தார். 

அப்போது அவருக்கு நடந்த அனுபத்தை நினைகூர்ந்தார், அதில் தாம் மடாதிபதியாக இருக்கும் கோரக்நாத் கோயிலிலும் குரங்குகள் வருவதாகவும், அவை தனது மடியில் அமர்ந்து தாம் கொடுப்பதை உண்டு மகிழ்ந்து சென்றுவிடுவதாகவும் கூறினார்.

அதனை தொடர்ந்து அரசு சார்பில் ரூபாய் 350 கோடிக்கான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதில், பிருந்தாவனில் 10 ஏக்கர் நிலம் விலங்குகளுக்காக ஒதுக்குவதாகவும் அறிவித்தார். இவை பசு மாடுகள் மற்றும் குரங்குகளின் புகலிடமாக அமைய உள்ளது.

''வாத்துகள் நீந்துவதால், தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. இதனால், மீன் உற்பத்தியும் மேம்படுகிறது,'' என, திரிபுரா முதல்-மந்திரியும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான, பிப்லப் குமார் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்