போலி ஆவணங்களால் வங்கியில் ரூ.120 கோடி கடன் வாங்கி மோசடி; 2 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு

போலி ஆவணங்களை கொடுத்து எச்.டி.எப்.சி. வங்கியில் ரூ.120 கோடி மோசடி செய்த 2 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-09-01 13:05 GMT

புதுடெல்லி,

டெல்லியில் குருகிராம் பகுதியில் ஆடம்பர ரக கார்கள் விற்பனை செய்யும் 2 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களாக ராஷ் பால் சிங் டாட் மற்றும் மந்தீர் சிங் டாட் ஆகிய இருவர் உள்ளனர்.

இந்த நிலையில் போலியான ஆவணங்களை கொண்டு எச்.டி.எப்.சி. வங்கியில் இருந்து ரூ.120 கோடி தொகையை இருவரும் கடனாக பெற்றுள்ளனர்.

இதுபற்றி வங்கியின் உதவி துணை தலைவர் சஞ்சய் சர்மா போலீசில் புகார் அளித்துள்ளார்.  இதனை அடுத்து 2 நிறுவனங்கள் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்