ஜம்முவில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. #JKLandslides

Update: 2018-08-14 06:27 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ராம்பான் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் பலத்த மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் நிலச்சரிவினால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், உதம்பூர் மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலை நிலச்சரிவினால் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலையை சரி செய்யும் பணி முடங்கியுள்ளது. மழை ஓய்த பின்னரே, நிலச்சரிவினால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சரி செய்ய இயலும் எனக் கூறினார். இதனிடையே நேற்றும் வெளுத்து வாங்கிய பலத்த மழையால் சுமார் 9 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்