மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #MoonSoonSession

Update: 2018-07-13 06:47 GMT
ஐதராபாத்,

தென் மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு மிகப்பெரிய கூட்டணியாக முன்பு விளங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என குற்றம் சாட்டி, கூட்டணியில் இருந்து விலகியது. அதோடு, அண்மைக்காலமாக பாஜகவுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது. 

இந்த நிலையில், அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்தது. ஆனால், பாராளுமன்றம் கடும் அமளி காரணமாக அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது நினைவு கொள்ளத்தக்கது.

மேலும் செய்திகள்