மிரட்டல் வழக்கில் நிழல் உலக தாதா அபு சலீமுக்கு 7 ஆண்டு ஜெயில்
மிரட்டல் வழக்கில் நிழல் உலக தாதா அபு சலீமுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
பிரபல நிழல் உலக தாதா அபு சலீம் 2002 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் குப்தா என்பவருக்கு பாதுகாப்பு தருவதாக கூறி ரூ. 5 கோடி கேட்டு மிரட்டினான் . இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அபு சலீமுக்கு ஏழு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு மார்ச் 12–ந் தேதி பல்வேறு இடங்களில் சுமார் 2 மணிநேரமாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு அபு சலீம் தண்டனை அனுபவித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.