பாகிஸ்தானியர் என சந்தேகிக்கப்படும் காது கேளாத, வாய் பேச முடியாத விசாரணை கைதி மரணம்

பாகிஸ்தானியர் என சந்தேகிக்கப்படும் காது கேளாத, வாய் பேச முடியாத 65 வயது விசாரணை கைதி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.

Update: 2018-06-04 08:24 GMT

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், உடல் நல குறைவால் கடந்த மே 29ந்தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு பல உறுப்புகள் பழுதடைந்த நிலையில் நேற்று உயிரிழந்து விட்டார்.

அந்நபரின் பிரேத பரிசோதனை நடந்து முடிந்துள்ளது.  அவர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்து இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.   காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத அவரை அடையாளம் காண முடியவில்லை.  உறவினர்கள் யாரும் உடலை கேட்காத நிலையில் அதற்குரிய நடைமுறை பின்பற்றப்படும்.

மேலும் செய்திகள்