”பத்மாவத்” திரைப்படத்திற்கு ஹரியானா மாநிலமும் தடை விதிப்பு

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை மேற்கோள் காட்டி ”பத்மாவத்” திரைப்படத்திற்கு ஹரியானா மாநிலமும் தடை விதித்துள்ளது. #Padmavaat | #DeepikaPadukone

Update: 2018-01-16 10:25 GMT
சண்டிகார்,

தீபிகா படுகோனே நடிப்பில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய வரலாற்று கதையை மையாக கொண்டு  எடுக்கப்பட்ட படத்திற்கு பத்மாவதி என்று பெயரிடப்பட்டது. இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர். 

இதைத்தொடர்ந்து, இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய மத்திய தணிக்கைக் குழு, படம் வெளியிடுவதற்கு தடையாக இருந்த வசனங்கள் மற்றும் சில காட்சிகளை நீக்கும்படி அறிவிவுறுத்தியதாக செய்தி வெளியானது.  பத்மாவதி திரைப்படம் பத்மாவத் என்ற பெயரில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

சர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்ட போதிலும், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இந்த படத்தை வெளியிட அனுமதி கிடையாது என்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஹரியானா மாநிலமும் பத்மாவத் படத்தை திரையிட அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில மந்திரி தெரிவித்துள்ளார்.   #Padmavaat  | #DeepikaPadukone

மேலும் செய்திகள்