அன்னிய செலவாணி விதிமுறைகளை மீறியதாக புகார்: ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
அன்னிய செலவாணி விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றாச்சாட்டு தொடர்பாக ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் 20 ஒவர் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானது ஆகும். இந்த தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளார். இந்த நிறுவனத்தில் ஷாருக்கானின் மனைவி கவுரி மற்றும் நடிகையும் ஷாருக்கானின் தோழியுமான ஜுஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மேதா ஆகியோரும் அணியின் உரிமையாளர்களான உள்ளனர்.
இந்த நிலையில், அன்னிய செலவாணி விதிகளை மீறி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதிப்பு வேண்டும் என்றே குறைத்து காட்டப்பட்டதாகவும் இதன் காரணமாக 73.6 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அணி உரிமையாளர்களுக்கு கடந்த நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் ஆனால், ஷாருக்கான் அப்போது அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. இந்த நிலையில், விதிமீறல்தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு ஷாருக்கானுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சட்ட விரோதமாக பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை முகமைகள் ஷாருக்கானிடம் விசாரணை நடத்தியது நினைவிருக்கலாம்