எய்ம்ஸ் மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு டாக்டர்கள் கடிதம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பதாக பிரதமர் மோடிக்கு டாக்டர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் மற்றும் நாய்கள் தொலை அதிகரிப்பதாக இதனால் நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனையில் உலாவும் குரங்குகளால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பார்வையாளர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை பறித்து சென்றுவிடுகின்றன. மேலும் நோயாளிகளை குரங்குகள் கடித்துவிட்டு ஓடிவிடுகின்றன. இதனால் நோயாளிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தெரு நாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளன. குரங்குகள் மற்றும் நாய்களால் பார்வையாளர்கள் மருத்துவமனைக்கு வர அச்சப்படுகின்றனர். இதனை தடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.