பிரதமர் மீது சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி

ராணுவ அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர் மஞ்சுநாதா. இவர் டெல்லி தனி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

Update: 2017-07-16 23:48 GMT

புதுடெல்லி,

ராணுவ அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர் மஞ்சுநாதா. இவர் டெல்லி தனி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘ ராணுவ அமைச்சகம், விமானப்படை அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது தொடர்பாக புகார் மனுவை ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பி இருந்தேன். ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பிரதமர் மோடிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி வீரேந்தர் குமார் கோயல், பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லாத நிலையில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என உத்தரவிட்டார்.

மஞ்சுநாதா, பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பணிநீக்கம் செய்யப்பட்டவர். மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. அதே சமயம் அவருடைய மனநிலையை எய்ம்ஸ் டாக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்