பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு
இந்திய ராணுவ வீரர் முகமது நசீர் பாகிஸ்தானுடனான மோதலில் வீரமரணம் அடைந்துள்ளார்.
ரஜோரி,
பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இந்திய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் முகமது நசீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.