முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசை அனுமதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசை அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு செய்துள்ளது.

Update: 2017-07-10 12:12 GMT

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதற்காக 7.85 கோடி ரூபாய் அணையை பலப்படுத்துவதற்காக, சீரமைப்பதற்காக  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கேரள அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது

அப்போது முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணியை மேற்கொள்ள தமிழக அரசை அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்