காஷ்மீரில் போலீஸ் நிலைகள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு
காஷ்மீரில் போலீஸ் நிலைகள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
புல்வமா,
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் காவல்துறையினர் தற்காலிக நிலைகள் அமைத்து அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். நேற்று இரவு இந்த நிலைகள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில், சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் அங்குள்ள பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்